yarum illa pon neram Tamil song lyrics - Naane Varuvean | Dhanush | Yuvan Shankar Raja | Anthony Daasan Lyrics - Anthony Dasan

Singer | Anthony Dasan |
Composer | Yuvan Shankar Raja |
Music | K.J. Vijay |
Song Writer | Vivek |
yarum illa pon neram Tamil song lyrics
யாரும் இல்லா பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
காடும் காற்றும் கை வீசுமே
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே
நீயும் நானும் வாழும் வரை
காட்டில் எங்கும் காதல் மழை
நம்மை போலே ரெண்டு சிலை
இது போதும் என் காலம் வரை
ஆடும் தோணி நீரில் சிறை
பாடும் வண்டு தேனில் சிறை
காணும் யாவும் கண்ணில் சிறை
இது போல் நானும் இன்பத்தில் ஆயுள் சிறை
ருவென இருந்தேன் துணியென மடித்தாய்
துடுப்பின்றி அலைந்தேன் துணையாய் கிடைத்தாய்
மணல் என இருந்தேன் மலர்வனம் கொடுத்தாய்
மரங்களின் நிழலில் நீயே சிரித்தாய்
நான் அம்போடு வாழ்ந்த காலம் எல்லாம்
உன் அன்போடு மாறிப் போகுதடி
நான் சொல்லாமல் போன சோகம் எல்லாம்
ஏன் இல்லாமல் இன்று ஆகுதடி
அழகு பிள்ளைகள் பாதைக்குள் காயமில்லை
உன் பக்கத்தில் என் நெஞ்சில் பாரமில்லை
நதியின் ஓசை நகரும் போது நமையும் தாலாட்டுதே
யாரும் இல்லா பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
காடும் காற்றும் கைவீசுமே
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே
நீயும் நானும் வாழும் வரை
காட்டில் எங்கும் காதல் மழை
நம்மை போலே ரெண்டு சிலை
இது தான் என் உயிர் தேவை